‘சோளக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தொழிலாளி’.. கொலை தொடர்பாக விசாரணை நடத்த உறவினர்கள் போராட்டம்!

 

‘சோளக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தொழிலாளி’.. கொலை தொடர்பாக விசாரணை நடத்த உறவினர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அத்தியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார் (40). இவர் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி வீட்டிலிருந்து செங்கல்சூளைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

‘சோளக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தொழிலாளி’.. கொலை தொடர்பாக விசாரணை நடத்த உறவினர்கள் போராட்டம்!

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குமாரின் உடல் செங்கல் சூளை அருகே இருக்கும் சோளக்காட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக திருப்பனந்தாள் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். செங்கல்சூளை உரிமையாளர் காவலர் ஒருவரின் உறவினர் என்பதால் இந்த வழக்கை விசாரிக்க போலீஸ் மறுப்பதாக குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் நடத்தினர்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், குமாரின் இறப்பு தொடர்பாக வேறு ஒரு காவலர் விசாரணை நடத்த வேண்டும் என்று மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் குமாரின் மனைவி மனு அளித்தார். இதனையடுத்து நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.