‘தாறுமாறாக வந்த லாரி மோதி விபத்து’ சாலையோரம் உறங்கியவர் பரிதாப பலி!

 

‘தாறுமாறாக வந்த லாரி மோதி விபத்து’ சாலையோரம் உறங்கியவர் பரிதாப பலி!

கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியே செல்வதை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் குறைந்திருந்த வாகன புழக்கமும், விபத்துகளும் தற்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், ஓசூர் அருகே லாரி மோதி சாலையில் உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தாறுமாறாக வந்த லாரி மோதி விபத்து’ சாலையோரம் உறங்கியவர் பரிதாப பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கரும்பு ஜூஸ் வியாபாரி ஒருவர், சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். இன்று அதிகாலை தாறுமாறாக வந்த லாரி, பிளாட்பாரம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய வியாபாரி, ரத்த வெள்ளத்தில் துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், லாரியை ஓட்டி வந்த ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.