‘கொடைக்கானலில் கனமழை’ காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி!

 

‘கொடைக்கானலில் கனமழை’ காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழை பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல கொடைக்கானலிலும் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘கொடைக்கானலில் கனமழை’ காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி!

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த யோகராஜ் என்பவர் ஆற்றை கடந்து சென்றுள்ளார். அப்போது, காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் அவர் அந்த வெள்ளத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.