‘கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை’… போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்.. எட்டயபுரத்தில் பரபரப்பு!

 

‘கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை’… போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்.. எட்டயபுரத்தில் பரபரப்பு!

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீது போலீசார் தாக்குதல் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இரு நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதால் தந்தை, மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவ்வாறு காவலர்கள் மீது புகார்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் போலீசார் தாக்கியதால் கட்டிட தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

‘கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை’… போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக புகார்.. எட்டயபுரத்தில் பரபரப்பு!

கட்டிட தொழிலாளியான கணேசமூர்த்தி கடந்த சனிக்கிழமை மது அருந்தி விட்டு ரோட்டில் படுத்துக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த எட்டயபுரம் போலீசார், அவரை தாக்கி வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் இதனால் அவர் மன அழுத்தத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது. விரக்தியில் இருந்த அவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் போலீசார் தாக்கியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த கோவில்பட்டி கோட்டாட்சியர் கணேசமூர்த்தியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.