‘ராணுவ வீரர் உடையை மாற்றி போட்டதால் சிக்கிய இளைஞர்’ : மணமகள் வீட்டாரை ஏமாற்ற செய்த வேலை!

 

‘ராணுவ வீரர் உடையை மாற்றி போட்டதால் சிக்கிய இளைஞர்’ : மணமகள் வீட்டாரை ஏமாற்ற செய்த வேலை!

கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவன்று, இந்தூரில் உள்ள தலைமை ராணுவ முகாம் பகுதியில் ராணுவ உடை அணிந்துகொண்டு ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார். அந்த நபரைப் பார்த்து ராணுவ வீரர்கள், சந்தேகம் அடைந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதிக்கு வந்த இந்தூர் இன்ஸ்பெக்டர் மிஸ்ரா அந்த நபரை பிடித்து விசாரித்திருக்கிறார். அப்போது அந்த நபர், தான் பீகாரைச் சேர்ந்த மிதுன் வர்மா என்றும் மணமகள் வீட்டாரை ஏமாற்ற ராணுவ உடை அணிந்து வந்ததேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

‘ராணுவ வீரர் உடையை மாற்றி போட்டதால் சிக்கிய இளைஞர்’ : மணமகள் வீட்டாரை ஏமாற்ற செய்த வேலை!

இது குறித்து பேசிய அதிகாரி மிஸ்ரா, மிதுன் வர்மா ராணுவ உடையை தவறாக அணிந்து இருந்ததைக் கண்ட ராணுவ வீரர்கள் உடனடியாக தகவல் கொடுத்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகாரின் ராஜ்கத் மாவட்டத்தின் பியோரா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார் என்றும் தெரியவந்தது. மேலும், அவரது செல்போனில் ராணுவ வீரர் போன்ற போலி ஐடி கார்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தார்.

அதனடிப்படையில் மிதுன் வர்மாவிடம் விசாரணை தொடர்கிறது. மணமகள் வீட்டாரை ஏமாற்ற தான் அவர் ராணுவ உடை அணிந்து வந்தாரா? அல்லது மிதுன் வர்மா வேறு ஏதேனும் அமைப்புகளை சேர்ந்தவரா? என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.