குடிபோதையில் தங்கை வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர் கைது.. வீட்டில் வளர்த்த நாய் உடல் சிதறி உயிரிழந்ததால் பரபரப்பு!

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால், பல வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகு வன்முறைகள் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் குடித்ததை தட்டிக் கேட்ட தங்கை வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ttn

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன் பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் குடித்து விட்டு அவரது தங்கையிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்துள்ளார். அதே போல நேற்று இரவும் சண்டை போட்டுள்ளார். இதனால் செல்வராணிக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த முருகன் தனது தங்கை வீட்டிலேயே, தனது நண்பரின் உதவியுடன் 4 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

ttn

அந்த நாட்டு வெடிகுண்டுகள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படுமாம். அதனை முருகன் வீசியதால், செல்வராணியின் மகன்கள் இரண்டு பேரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர். ஆனால், செல்வராணி வீட்டில் இருந்த நாய் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், முருகனை கைது செய்து தப்பியோடிய நண்பரை தேடி வருகின்றனர்.

Most Popular

ஒலிம்பிக் போட்டியின் இந்தியா டீம் ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்!

உலகமே கொண்டாடும் விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக் போட்டிகள். வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருந்து எண்ணற்ற திறமையாளர்கள் மைதானத்தில் நிறைந்து வழியும் அற்புதம் நிகழ்வதும்கூட. சென்ற ஒலிம்பிக் 2016 ஆம் ஆண்டு...

“தூக்கு போடுறத பாக்கு போடுற மாதிரி பண்ணும் சிறுவர்கள்” -இந்த பையன் தற்கொலை பண்ணிக்கிட்ட அற்ப காரணத்தை பாருங்க .

ஒரு சிறுவன் தன்னுடைய தாயார் விளையாட பூனைக்குட்டி வாங்கி தராததால் தூக்கு போட்டுக்கொண்ட சம்பவம் அந்த பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் தந்தை வெளிநாட்டிலிருப்பதால் ஒரு தாயும் 15 வயது சிறுவனும்...

‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்...

பதவியை தக்க வைத்துக்கொள்ள குழப்பம் ஏற்படுத்துகிறார்களா அதிமுக அமைச்சர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கட்சி பொறுப்பும், முதல்வர் பொறுப்பும் ஓ.பன்னீர் செல்வத்திடம் வந்தது. ஆனால் சசிகலாவின் வற்புறுத்தலின் பேரில் முதல்வர் பதவியை துறந்ததாக ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு...
Do NOT follow this link or you will be banned from the site!