தமிழகம் – கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை! இணையவழி கருத்தரங்கில் இணைந்த திருமாவளவன், வெ.பொன்ராஜ்

 

தமிழகம் – கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை!  இணையவழி கருத்தரங்கில் இணைந்த திருமாவளவன், வெ.பொன்ராஜ்

மிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகளை விளக்கும் விதமாக கொரிய தமிழ்ச் சங்கம் மற்றும் தென்புலத்தார் குழுமம் இணைந்து “பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை” எனும் தலைப்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றை செப்டம்பர் 12, 2020 அன்று நடத்தினர்.


கருத்தரங்கை முதன்மைப்பொறுப்பாளர்கள், இணைச்செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ், தகவல் தொழிநுட்பத்துறை முதன்மைப்பொறுப்பாளர் பொறியாளர். சகாயடர்சியூஸ், இணைச்செயலாளர்முனைவர். மோ.பத்மநாபன், தலைவர்முனைவர். இராமசுந்தரம், மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். லோ.ஆனந்தகுமார்ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தமிழகம் – கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை!  இணையவழி கருத்தரங்கில் இணைந்த திருமாவளவன், வெ.பொன்ராஜ்

நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர். இராமசுந்தரம் வாழ்த்தி வரவேற்றார். கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செயல்பட்டு குழு பொறுப்பாளர் முனைவர். பாஸ்கரன் புருஷோத்தமன் விளக்கினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து இணைச்செயலாளர் முனைவர். ஆரோக்கியராஜ் பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் ஒரிசா பாலுவை அறிமுகப்படுத்தி மூத்த உறுப்பினர் த.யசோதாவும், பேராசிரியர் முனைவர் நா.கண்ணனை அறிமுகப்படுத்தி துணைத்தலைவர் முனைவர். கிறிஸ்டி கேத்தரினும், கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய நடாளுமன்ற உறுப்பினர் முனைவர்.தொல் திருமாவளவனை நிகழ்ச்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆரோக்கியராஜும் அறிமுகப்படுத்தி பேசினார்கள்.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அப்துல்கலாமின் ஆலோசகர் வெ.பொன்ராஜ், கருத்தரங்கானது வெற்றிபெற வாழ்த்துரை ஒன்று வழங்கினார்.

கருத்தரங்கில் உரையாளராக கலந்து கொண்ட உலகத் தமிழன் ஒரிசா பாலு, பண்டைய தமிழகம் மற்றும் கொரியாவிற்கு இடையேயான கடல் வணிகம் பற்றியும் அதன் மூலம் இரு நாட்டிற்கும் இடையில் இருந்த தொடர்புகள் பற்றியும் மிக அழகாக எடுத்துக் கூறினார்.

கருத்தரங்கில் மற்றொரு உரையாளராக கலந்து கொண்ட பேரா. முனைவர். நா.கண்ணன் தமிழ் மற்றும் கொரிய மொழிகளுக்கு இடையேயான தொடர்புகளை அழகாக வியத்தகு வகையில் எடுத்துரைத்தார்.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினர் முனைவர் தொல். திருமாவளவன் எம்.பி. , பழந்தமிழர்களின் பெருமையினையும், புலம்பெயர்தலின் முக்கியத் துவத்தையும், பண்டைய தமிழகம் மற்றும் கொரியா இடையிலான வணிகம், மொழியியல், வாழ்வியல் மற்றும் அரசு ஆட்சிமுறை பற்றியும், மனிதம் மற்றும் மனிதாபிமானம் குறித்தும், அன்றைய மக்களின் வாழ்வியல் மற்றும் இன்றைய மக்களின் வாழ்வியல் பற்றியும் இறுதியாக ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்தும் அழகான சிறப்புரையாற்றினார்.

தமிழகம் – கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை!  இணையவழி கருத்தரங்கில் இணைந்த திருமாவளவன், வெ.பொன்ராஜ்

கருத்தரங்கின் முக்கிய தீர்மானமான, பண்டைய காலத்திலிருந்தே மிக ஆழமான உறவுகளைக் கொண்டுள்ள தமிழகம் மற்றும் கொரியா இடையேயான தொடர்புகள் அடுத்தகட்ட நகர்விற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதினை கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பொறியாளர். சகாய டர்சியூஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் ஆளுமைகள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரிடம் வேண்டுகோள் வைத்தார். மேலும் அவர் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்தியஅரசுமற்றும் தமிழக அரசிடம் வலியுறுத்தவேண்டிய கோரிக்கைகளாக,

  1. தமிழகம் மற்றும் கொரியாவிற்கு இடையே நெடுங்காலமாக இருந்து வரும் உறவைத் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சொல்லுதல்
  2. இந்திய மத்திய அரசிற்கு முறைப்படி தெரியப்படுத்துதல்
  3. தமிழ் மற்றும் கொரிய மொழிகளுக் கிடையேயான ஒற்றுமைகளை மேலும் வெளிக்கொணர ஆராய்ச்சி மையம் நிறுவுதல்
  4. தமிழகம் மற்றும் கொரிய தொடர்புகளை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு மற்றும் தென் கொரியாவில் நினைவுச்சின்னம் அமைத்தல்
  5. தென் கொரியாவில் தமிழ் இருக்கை அமைக்க உதவுதல்.
    ஆகிய 5 கோரிக்கைகளை நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், இந்திய பாராளுமன்ற உறுப்பினர் முனைவர். தொல். திருமாவளவன் முன்மொழிந்தார்.
    தீர்மானங்களையும் கோரிக்கைகளையும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர். இராமசுந்தரம் வழிமொழிந்தார்.
தமிழகம் – கொரியா இடையேயான தொடர்புகள் ஓர் பார்வை!  இணையவழி கருத்தரங்கில் இணைந்த திருமாவளவன், வெ.பொன்ராஜ்

நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் எதிர்கால ஆளுமை முனைவர். செ.அரவிந்தராஜா நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் வளரும் இசைக்கலைஞர் சர்வேஷ் பாரதிராஜா தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் இசைத்தார். மெட்ரோ நாட்டியாலயா மாணவி எஸ்.பி.சுபா காவ்யா வரவேற்புரை நடனமாடினார்.