ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஒற்றை யானை உலா… அச்சத்தில் மலைக்கிராம மக்கள்…

 

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஒற்றை யானை உலா… அச்சத்தில் மலைக்கிராம மக்கள்…

தேனி

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஹைவேவிஸ் பேரூராட்சியில் இரவங்கலாறு, மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட 7 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. கேரள மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதிக்கு, ஐயப்பன் கோயில் சீசன் காரணமாக வன விலங்குகள் இடம்பெயர்வது அதிகரித்து உள்ளது. அவ்வாறு இடம்பெயர்ந்த காட்டுயானை ஒன்று கடந்த மாதம் மணலாறு மற்றும் மேல் மணலாறு கிராமங்களை சேர்ந்த 2 தேயிலை தோட்ட தொழிலாளர்களை தாக்கி கொன்றது. இதனால் அச்சமடைந்த மலைக்கிராம மக்கள் யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் ஒற்றை யானை உலா… அச்சத்தில் மலைக்கிராம மக்கள்…

இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை, இரவங்கலாறு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் உலா வந்தது. மேலும், அங்குள்ள வீட்டின் கதவை உடைத்து சமையல் அறையையும் சேதப்படுத்தியது. இந்த நிகழ்வின்போது வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் அந்த காட்டுயானை இரண்டாவது நாளாக இன்றும் இரவங்கலாறு பகுதியில் முகாமிட்டு அங்குள்ள தேயிலை தோட்டப் பகுதிகளில் சுற்றி திரிகிறது. இதனால் பீதியில் ஆழ்ந்துள்ள மலைக்கிராம மக்கள், ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டுமென தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.