‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்!

 

‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்!

பெங்களூரு அருகே கணவன் தன்னை தொந்தரவு செய்ததால் கொரோனா பாதித்ததாக கூறி பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு மஹானாகரா பல்லிகே பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கொரோனா பாதித்ததாக கடந்த செப்.4ம் தேதி ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அவர் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணின் கணவர் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது, மருத்துவமனையில் அப்படி யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிய வந்ததால், அவர் போம்மனஹல்லி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், செய்தித் தாளிலும் விளம்பரம் செய்துள்ளனர்.

‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்!

இதனை அறிந்த அந்த பெண், போம்மனஹல்லி காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு தனது கணவரும் அவரது சகோதரரும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் தான் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கொரோனா பாதிப்பு எல்லாம் நாடகம் என்றும் இனிமேல் தான் வீட்டுக்கு திரும்பிப் போக விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அந்த பெண் தனது நண்பர்களின் உதவியுடன், ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து பெங்களூரில் இருந்து டெல்லிக்கு சென்றதை அறிந்த ஆய்வாளர் பெண்ணின் குடும்பத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

‘டார்ச்சர் செய்த கணவன்’.. கொரோனா பாதிப்பு எனக்கூறி வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன பெண்!

இதனையடுத்து, பெண்ணின் சோகதரர் அவரை பார்க்க விரும்புவதாகவும், கணவனின் சகோதரர் டெல்லியில் சென்று தேடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். தன்னை டார்ச்சர் செய்ததாக வீட்டை விட்டு வெளியேறிய அந்த பெண் முறையாக புகார் ஏதும் கொடுக்காததால் கணவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.