பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

 

பண்ணை பசுமை கடைகளில்  இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வு என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த 10 ஆண்டுகளில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதலை கூட்டுறவுத்துறை செய்து வருகிறது. இந்த ஆண்டும் வெங்காய விளைச்சல் அதிகம் உள்ள பகுதிகளான மகாராஷ்டிரா. கர்நாடகா. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொள்முதல் செய்யவிருந்த நிலையில் கன மழை காரணமாக அங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டு தற்போது விலை அதிகரித்துள்ளது.

பண்ணை பசுமை கடைகளில்  இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

இதனால் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் இயங்கிவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45 க்கு இன்று முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணை பசுமை கடைகளில்  இன்று முதல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை!

வெங்காய விலை உயர்வை தமிழக அரசு தினந்தோறும் கண்காணித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 110 விற்கப்பட்டது. இதனால் உடனடியாக பொதுமக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அந்த வகையில் இன்று முதல் கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 45 க்கு கிடைக்கும் என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.