கேரளாவில் மதுபானம் வாங்க மொபைல் ஆப் மூலம் இ-டோக்கன் முறை அறிமுகம்

 

கேரளாவில் மதுபானம் வாங்க மொபைல் ஆப் மூலம் இ-டோக்கன் முறை அறிமுகம்

கொச்சி: மதுபானம் வாங்குபவர்களுக்காக பெவ்க்யூ (BevQ) என்ற மொபைல் ஆப் மூலம் இ-டோக்கன் கொடுக்கும் முறை கேரளாவில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் புதிதாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் பெவ்க்யூ மூலம், மதுபான விற்பனைக்கு மெய்நிகர் வரிசை முறை (virtual queue system) கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள அரசு உருவாக்கியுள்ள இந்த மொபைல் ஆப்பிற்கு கூகுள் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆப்-ஐ விரைவில் கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்ய முடியும். கொச்சியை சேர்ந்த ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மூலம் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மதுபானம் வாங்க மொபைல் ஆப் மூலம் இ-டோக்கன் முறை அறிமுகம்

கேரளாவில் கடந்த வாரம் முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக் கடைகளுக்கு வரும் கூட்டத்தை தவிர்க்க மொபைல் ஆப் மூலம் டோக்கன் வழங்கி மது விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி பெவ்க்யூ மொபைல் ஆப் மூலம் டோக்கன் பெற்ற பின்பு மதுக்கடைக்கு சென்று மதுபானம் வாங்கிக் கொள்ளலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை கேரளாவில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.