பவானிசாகர் அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்

பவானிசாகர் அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்

ஈரோடு

பவானிசாகர் அணை பகுதியில் குட்டிகளுடன் ஆனந்த குளியில் இட்டு மகிழும் யானைக்கூட்டங்களை, சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள காட்டுயானைகள், தண்ணீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வருவது வழக்கம்.

பவானிசாகர் அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்

தற்போது மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள குட்டைகள் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையிலும், அணைக்குள் இறங்கி சென்று நீர் அருந்தவே யானைகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் நேற்று பவானிசாகர் அணையின் மேல்பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள், குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்று அணைப்பகுதிக்குள் இறங்கின.

பவானிசாகர் அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்

தொடர்ந்து, குட்டிகளை அணைத்தவாறு நீரில் இறங்கி தண்ணீர் அருந்தியதுடன், ஆனந்த குளியல் போட்டு இளைப்பாறின. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அணைப் பகுதியில் நீராடிய யானைக்கூட்டம், பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.

பவானிசாகர் அணையில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்த யானைக்கூட்டம்

யானைகள் நடமாட்டம் காரணமாக அணையின் மேல் பகுதியில் மீனவர்கள், ஆடு மேய்ப்பவர்கள் அச்சத்துடன் சென்று வந்தாலும், யானைகளின் குளியலை நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர்.