குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளரை “சாக சொன்ன” அரசு அதிகாரி

 

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளரை “சாக சொன்ன” அரசு அதிகாரி

சட்டப்பேரவை நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் நிகழ்ச்சி துவங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே பாதுகாப்புக் காரணங்களுக்காக செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். இடையில் குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை.

குடிப்பதற்கு தண்ணீர் கேட்ட பத்திரிக்கையாளரை “சாக சொன்ன” அரசு அதிகாரி

பேரவையின் சார்புச் செயலாளர் பால சீனிவாசனிடம் தண்ணீர் கேட்டதற்கு அதற்கான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள் என்றும் கூறினார். அவசரத்திற்கு என்ன செய்வது? என்று கேட்டதற்கு “செத்தால் சாவுங்கள் கவலை இல்லை” என்று ஆணவத்தோடு கூறியது பத்திரிக்கையாளர்களை மட்டுமல்ல அங்கிருந்த காவல்துறையினரையும் மன வேதனை அடையச் செய்தது. தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டதற்கு வசைச் சொல்லால் இவ்வளவு பெரிய தண்டனையா? என சுற்றியிருந்த பத்திரிக்கையாளர்கள் முணுமுணுத்தனர். திமுக அரசு முன்கள பணியாளர்கள் என்ற கெளரவத்தை வழங்கினால் மட்டும் போதாது பத்திரிக்கையாளர்களுக்கு பொது இடங்களில் உரிய மரியாதை கொடுக்க வேண்டுமென்பதே ஊடக பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.