“என் மொபைலை வாங்கியது இந்த வேலைய பார்க்கவா?” – ஒரு கல்லூரி மாணவி பார்த்த வேலை

 

“என் மொபைலை வாங்கியது இந்த வேலைய பார்க்கவா?” – ஒரு கல்லூரி மாணவி பார்த்த வேலை

பக்கத்து வீட்டு ஆன்டியின் மொபைலிலிருந்து ஒரு கல்லூரி மாணவி 2லட்ச ரூபாய்க்கு மேல் ஆட்டைய போட்டதால் கைது செய்யப்பட்டார் .

“என் மொபைலை வாங்கியது இந்த வேலைய பார்க்கவா?” – ஒரு கல்லூரி மாணவி பார்த்த வேலை

டெல்லியின் நேரு விஹாரில் சுவாதி என்ற ஒரு 18 வயதான கல்லூரி மாணவியிருந்தார் .அந்த மாணவிக்கு மொபைலில் இருந்து வங்கியில் பணம் அனுப்பும் விவரம் எல்லாம் அத்துப்படி .அதனால் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு படிக்க தெரியாத ஒரு 50 வயதான ஒரு பெண்மணியிருந்தார் .அவரின் மகன் வெளியூரில் படிப்பதால் அந்த பெண் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்த கல்லூரி மாணவியிடம் தனது  வங்கி கணக்கிலிருந்தது பணம் அனுப்பும் வேலைகளை செய்ய சொல்வார் .பக்கத்து வீட்டு ஆன்டியின் இந்த படிக்க தெரியாத நிலைமையை அந்த பெண் தனக்கு சாதகமாக மாற்றி கொண்டார் .அதன்படி அந்த ஆன்டியின் அக்கவுண்டிலிருந்து பணம் எடுக்க சொல்லும்போதெல்லாம் அந்த பெண் தன்னுடைய கணக்கிற்கும் பணத்தை அனுப்பி கொள்வார் .மேலும் புதிதாக ஒரு பின் நம்பரை உருவாக்கி பணத்தை எடுத்துள்ளார் ,அதன் பின்னர் மொபைலை அவரிடம் கொடுத்து விடுவார் .

அதன்படி அந்த பெண் கடந்த ஓராண்டில் மட்டும் 238000 ரூபாய் அவரின் அக்கௌன்ட்டிலிருந்து ஆட்டைய போட்டுள்ளார் .அந்த பணத்தை கொண்டு அந்த பெண் துணிமணிகள் மற்றும் நகைகளை எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார் .இந்த  விவரம்  ஊரிலிருந்தது வந்த அவரின் மகன் மூலமாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது .அதனால் அவர் அந்த பெண் மீது போலீசில் புகார் கூறினார் .சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை பிடித்து விசாரித்து வருகிறார்கள் .

“என் மொபைலை வாங்கியது இந்த வேலைய பார்க்கவா?” – ஒரு கல்லூரி மாணவி பார்த்த வேலை