டிக்டாக்கில் ஆடிப்பாடி இளைஞர்களுக்கு வலை விரித்து பணமோசடி..கைதாகி கம்பி எண்ணும் இளம்பெண்!

டிக்டாக்கில் ஆடிப்பாடி இளைஞர்களுக்கு வலை விரித்து பணமோசடி..கைதாகி கம்பி எண்ணும் இளம்பெண்!

வேலையில்லாதவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட டிக்டாக், இன்று அதையே ஒரு வேலையாக செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. இன்று டிக்டாக் ஆபாசங்கள், ஜாதி சண்டைகள், பிறரை புண்படுத்துவது போன்ற செயல்களுக்காக பயன்படுத்தப்படும் கூடாரமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி தற்போது டிக்டாக் மூலம் பணம் பறிக்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

டிக்டாக்கில் ஆடிப்பாடி இளைஞர்களுக்கு வலை விரித்து பணமோசடி..கைதாகி கம்பி எண்ணும் இளம்பெண்!

மதுரை எல்லீஸ் நகர் சூர்யா குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(24). இவருக்கு வயது 24. இவர் பொழுதுபோக்கிற்காக டிக்டாக் செயலியை பயன்படுத்தி வந்த நிலையில், திருப்பூரை சேர்ந்த துர்கா தேவி என்பவர் டிக்டாக் செயலியில் அம்முகுட்டி என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறார். டிக்டாக்கில் பழகிய அந்த பெண்ணை நம்பி ராமச்சந்திரன் பலமுறை அவரது வங்கி கணக்கிற்கு 97000 ரூபாய் வரை பணம் அனுப்பியுள்ளார். அதன் பிறகு அந்த கணக்கு போலியானது என்று அறிந்த ராமச்சந்திரன் அந்த பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

டிக்டாக்கில் ஆடிப்பாடி இளைஞர்களுக்கு வலை விரித்து பணமோசடி..கைதாகி கம்பி எண்ணும் இளம்பெண்!

அதன் பின்னர் போலீசார் மேற்கோண்ட விசாரணையில், துர்கா பலரிடம் இதே போல பணமோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து திருப்பூர் ஆலங்காடு பகுதியில் இருக்கும் வீட்டில் பதுங்கி இருந்த துர்காவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது துர்கா, பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பலரிடம் பழகி பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததை ஒப்புக் கொண்டதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைந்துள்ளார்.