உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 107 பேர் பலி…

 

உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 107 பேர் பலி…

பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அடுத்த 72 மணி நேரத்துக்கு இடியுடன் கனமழையும் பெய்யும். ஆகையால் மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி இரு மாநிலங்களிலும் வானிலை மையம் எச்சரிக்கை செய்தது. வானிலை மையம் கணித்தப்படி நேற்று முதல் பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 107 பேர் பலி…

நேற்று அந்த இரு மாநிலங்களிலும் மின்னல் தாக்கி ஒரே நாளில் 107 பேர் உயிர் இழந்தனர். பீகாரில் 23 மாவட்டங்களில் மொத்தம் 83 பேரும், உத்தர பிரதேசத்தில் 24 பேரும் மின்னல் பரிதாபமாக உயிர் இழந்தனர். பீகாரில் உயிர் இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது நிலத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தபோது மின்னல் தாக்கி பலியாகி உள்ளனர். மின்னல் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

உ.பி. மற்றும் பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 107 பேர் பலி…

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் மின்னல் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும் தங்களது மாநிலத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அவர்கள் அறிவித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், அடுத்த 2 தினங்களுக்கு வானிலை கொந்தளிப்பாக இருக்கும் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைள் எடுத்துக்கொள்ளுங்கள். மோசமான வானிலை நேரத்தில் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி, வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.