உண்மைதான்.. இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் அவுட்.. பாகிஸ்தானின் முன்னாள் தூதர்

உண்மைதான்.. இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் அவுட்.. பாகிஸ்தானின் முன்னாள் தூதர்

இந்திய விமான படை பாலகோட் பகுதியில் நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஒருவர் டி.வி. விவாத நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார்

2019 பிப்ரவரி 14ம் தேதியன்று காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்த மாதம் 26ம் தேதியன்று இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய தரப்பில் கூறப்பட்டது.

உண்மைதான்.. இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் அவுட்.. பாகிஸ்தானின் முன்னாள் தூதர்
ஆஹா ஹிலாலி

ஆனால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதையாக இந்திய விமான படை தாக்குதலில் ஒருவர் உயிர் இழக்கவில்லை என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால் இந்திய விமான படைத் தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஆஹா ஹிலாலி தற்போது அந்நாட்டு டி.வி. விவாதங்களில் பங்கேற்று வருகிறார்.

உண்மைதான்.. இந்தியா நடத்திய பாலகோட் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் அவுட்.. பாகிஸ்தானின் முன்னாள் தூதர்
பாலகோட் பகுதி

ஆஹா ஹிலாலி எப்போதும் டி.வி. விவாதங்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாகதான் பேசுவார். அண்மையில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஹா ஹிலாலி இந்திய விமான படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலில் 300 பேர் உயிர் இழந்தனர் என தெரிவித்தார். ஆக, இந்திய விமான படையின் பாலகோட் தாக்குதலில் ஒரு உயிர் கூட இழக்கவில்லை என்று பாகிஸ்தான் பொய்தான் கூறியது என்று தற்போது ஆதார பூர்வமாக உறுதியாகி உள்ளது.