சுண்டியிழுக்கும் மூக்கு வசீகரம்!

மூக்கு வசீகரம்… அழகான பெண்களை வர்ணிக்கும்போது, `மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கா…’ என்பார்கள். இந்த மூக்கழகு ஆண்களுக்கும் பொருந்தும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, முகத்தின் அழகு வசீகரமாக இருக்க மூக்கு எடுப்பாக இருக்கவேண்டும். மூக்கை எடுப்பாக வைத்துக்கொள்ள இயற்கை முறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.

எண்ணெய்ப் பசை:
பன்னீரை ஒரு பஞ்சில் நனைத்து 8 மணி நேரத்துக்கொரு தடவை மூக்கின் மேல் பகுதியையும் மூக்கைச் சுற்றிலும் துடைத்து வரலாம். சிலரது மூக்கின் மேல்புறத்தோலின் அடியில் எண்ணெய்ப் பசை கொழுப்புப் படிவங்கள் காணப்படும். காலை, மாலை நேரங்களில் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து மூக்கினை அழுத்தி எண்ணெய்ப் பசை படிவங்களை வெளியேற்றவேண்டும். அதை அழுத்தி வெளியேற்றியதும் வேப்பிலை போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்து வந்தால் மூக்கின் மேல் பகுதி சுத்தமாவதுடன் பருக்கள், கட்டிகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

வியர்வைத் துளிகள் மூக்கின் மேல் படிந்திருந்தால், அவ்வப்போது கைக்குட்டை அல்லது மெல்லிய துணியால் மூக்கைத் துடைத்துவிடுவது நல்லது. வாரத்தில் இரண்டு நாள் பாதாம் எண்ணெயில் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள் கலந்து மூக்கின்மீது தடவலாம். சிறிது நேரம் கழித்து மூக்கை கழுவி விடலாம். இப்படி செய்து வந்தால் மூக்கு வசீகரத் தோற்றம் பெறும்.


மூக்கு முடி:
ஆண், பெண் வித்தியாசமில்லாமல் சிலரது மூக்கின் உள்ளே வளர்ந்திருக்கும் முடிகள் மூக்கின் அழகான தோற்றத்துக்கு இடையூறாக இருக்கும். என்னதான் எடுப்பான தோற்றம் இருந்தாலும் மூக்கினுள்ளே இருக்கும் முடிகள் வெளியே எட்டிப்பார்த்தால் அது அசிங்கமான தோற்றத்தைத் தரும். எனவே, மூக்கிலுள்ள முடிகளை அவ்வப்போது வெட்டி அகற்றுவது நல்லது. இதேபோல் மூக்கினுள்ளே உலர்ந்திருக்கும் சளி மற்றும் கோழைப் படலங்களை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்துவது நல்லது. சில சொட்டுகள் பன்னீர் துளிகளை மூக்கினுள் தடவி சுத்தம் செய்யலாம்.

இவைதவிர தக்காளி, கேரட், பீட்ரூட் ஜூஸ் மற்றும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் மூக்கு வசீகர தோற்றம் பெறும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மூக்கை இழுத்து விடலாம். மூக்குக்கு மசாஜ் செய்வதும்கூட கூடுதல் அழகு பெற உதவும். சிலரது மூக்கு வசீகரத்தால் பார்ப்பவர்களை கிறங்கடிக்க வைக்க முடியும்.

Most Popular

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் : பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

ஆவினில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க அதிரடி பறக்கும் படை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு மின்னஞ்சல் வாயிலாக பால் முகவர்கள் சங்கம்...

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்...

அந்தமானில் திடீர் நிலநடுக்கம்!- அலறியடித்து ஓடிய மக்கள்

அந்தமானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை விட்டு மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம்...

உங்கள் குழந்தையை ஸ்கூலில் சேர்க்கப்போறீங்களா… இந்த 8 விஷயங்களைச் செக் பண்ணுங்க!.

கொரொனா நோய்த் தொற்று உலகம் முழுவதுமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. அதனால், பள்ளிகள், கல்லூரிகள் எதுவும் இயங்கவில்லை. தேர்வுகளைக்கூட ரத்து செய்துவிட்டார்கள். ஆனாலும், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கிவிட்டார்கள். பெற்றோர்களும் பிள்ளைகளைப் பள்ளியில்...
Open

ttn

Close