தேனி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: படுக்கைகளுடன் மரத்தடிக்கு வந்த கொரோனா நோயாளிகள்!

தேனி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: படுக்கைகளுடன் மரத்தடிக்கு வந்த கொரோனா நோயாளிகள்!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அருகே தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 6,472 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,92,964 ஆக அதிகரித்துள்ளது.  அந்த வகையில் தேனியில் 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த பாதிப்பு 3,295 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: படுக்கைகளுடன் மரத்தடிக்கு வந்த கொரோனா நோயாளிகள்!

அதன்படி  தேனி அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வார்டின் அருகில் தூய்மைப் பணியாளர்கள் பயன்படுத்தும் ரசாயன மற்றும் கெமிக்கல் பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக அந்த அறையில் தீ பற்றி உள்ளது இதனால் ரசாயனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் மருத்துவமனையின் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

தேனி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: படுக்கைகளுடன் மரத்தடிக்கு வந்த கொரோனா நோயாளிகள்!

இருப்பினும் புகை மூட்டத்தால் அங்கிருந்த நோயாளிகள் மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனால் பலரும் தங்கள் படுக்கைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் மரங்களின் அடியில் படுக்க வைக்கப் பட்டனர். இந்த தீ விபத்தில் பொருட்கள் சேதம் எவ்வளவு ஏற்பட்டுள்ளது என கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.