அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் தடைகளை இறுக்கும் பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்…. மறுபடியும் லாக்டவுனுக்கு தள்ளப்படும் நிலை

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் தடைகளை இறுக்கும் பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்…. மறுபடியும் லாக்டவுனுக்கு தள்ளப்படும் நிலை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் சில மாநிலங்கள் தற்போதைய அன்லாக் 1.0 தளர்வுகளில் சிலவற்றை திரும்ப பெற முடிவு செய்துள்ளன. மற்ற மாநிலங்கள் முழு லாக்டவுனை செயல்படுத்து குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. குறிப்பாக பஞ்சாப், தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் தடைகளை மீண்டும் இறுக்க தொடங்கியுள்ளன.

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் தடைகளை இறுக்கும் பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்…. மறுபடியும் லாக்டவுனுக்கு தள்ளப்படும் நிலை

பஞ்சாப்பில் இ பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதி என்ற கட்டுபாட்டுடன் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் லாக்டவுனை கடுமையாக கடைப்பிடிக்க அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெல்லிருந்து பஞ்சாப்புக்கு வருபவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை கட்டாயம் எனவும் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் கொரோனா….. மீண்டும் தடைகளை இறுக்கும் பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள்…. மறுபடியும் லாக்டவுனுக்கு தள்ளப்படும் நிலை

தமிழ்நாட்டில் சென்னையில் முழுமையான லாக்டவுனை மாநில அரசு மீண்டும் நடைமுறைப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 70 சதவீதம் சென்னையில் உள்ளது. சத்தீஸ்கரில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த முழு லாக்டவுனை அமல்படுத்த முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரள அரசு கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுக்கும் முறையை கடுமையான அளவுகோல்களுடன் மறுசீரமைக்க முடிவு செய்துள்ளது. ஆக பல மாநிலங்கள் மறுபடியும் முழு லாக்டவுனை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையில் இருப்பதாக தெரிகிறது.