Home லைப்ஸ்டைல் “வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்

“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்

வாழ்க்கையில் குடும்பமும், வேலையும் முக்கியம்.குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம்.உழைப்பதால்தான் குடும்பச் சக்கரம் சுழல்கிறது.ஆனால் குடும்பம் வேற..வேலை வேற. இது தெரியாமல் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வீண் டென்ஷனாகிறார்களாம். உலகப் புகழ் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இதனைச் சொல்லியிருக்கிறது.

“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்
“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்
ISSY-LES-MOULINEAUX, FRANCE – MARCH 06: Microsoft logo on the Microsoft France campus, which inaugurates the IA Microsoft School, on March 6, 2018 in Issy-les-Moulineaux, France. The American IT multinational opens its artificial intelligence school in partnership with start-up Simplon.co, and welcomes its first promotion of 24 people aged 19 to 39. (Photo by Christophe Morin/IP3/Getty Images)


இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் கடந்த ஆறு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஆசிய அளவில் வேலையின் போது எரிச்சல் அடைவோர் விகிதம் 29 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இந்த ஆய்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இந்தியப் பணியாளர்கள் தங்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பிரித்து கையாளத் தெரியாத காரணத்தை இதில் கண்டு பிடித்திருக்கிறர்கள்., மேலும் சமீபத்தைய கரோனா பாதிப்பு, பொதுமுடக்கம் காரணமாகவும், எரிச்சலடைவது அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் 19 சதவீத தொழிலாளர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தங்கள் நிறுவனத்தால் வழங்கப்படவில்லை என்பதும், அவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்


இதில், 28 சதவீதம் பேர் தங்களால் இயல்பாகவே நிர்வகிக்க முடியாத பணிச்சுமை மற்றும் அல்லது அதிகப்படியான வேலை நேரம், 34 சதவீதம் பேர் வேலையையும், தனிப்பட்ட வாழ்க்கையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி பார்ப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வேலைக்குப் போனால் வேலையை இஷ்டப்பட்டு, மகிழ்ச்சிகரமாகச் செய்ய வேண்டும். வீட்டுப் பிரச்சனைகளைப் பற்றி நினைக்கவோ விவாதிக்கவோ

“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்

கூடாது. அதே போல் வீட்டிற்கு வந்தால் வேலையையும், மேலதிகாரியையும் நினைக்காமல் மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தத்தால் நீங்கள் எப்போது யாரிடம் சொல்லிக் கொண்டு போவீர்கள்?” எனத் தெரியாது என எச்சரித்துள்ளது மைக்ரோ சாப்ட் நிறுவனம்.
“டாப் தமிழ் நியூஸ்” செய்திகளுக்காக இர.சுபாஸ் சந்திர போஸ்.

“வேலை வேற…குடும்பம் வேற…?” இது தெரியாமல் ‘வீண் டென்ஷனாகும்’ இந்தியர்கள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

‘பள்ளிகளில் புகார் பெட்டி’ பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பள்ளிக்குழந்தைகளைப் பாலியல் வன்முறையில் இருந்து பாதுகாப்பது குறித்த தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில்...

பிரபல திரைப்பட பாடகி கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பினால் திடீர் மரணம்

கொரோனா தொற்றில் இருந்து மீண்டும் வந்தும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளினால் சிகிச்சை பலனின்றி பிரபல பாடகி தபு மிஷ்ரா(36) உயிரிழந்தார்.தபு மிஷ்ராவின் தந்தை கொரோனாவால் கடந்த 10ம் தேதி உயிரிழந்த...

சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.54 லட்சம் கோடி லாபம்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்ந்தது. அமெரிக்க பெடரல் வங்கி இந்த...

“மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை… ரூ.5 லட்சம் அபராதம்”

இந்தியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவல் நீடித்து வருகிறது. இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறையினரே பெரும்பாலான பங்களிப்பை வழங்குகின்றனர். தங்களது உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோயாளிகளைக்...
- Advertisment -
TopTamilNews