“தியாகத் தலைவர்களின் வீரச்சரித்திரத்தை நினைவுகூற வேண்டிய நாள்” – ‘பவள’ சுதந்திர தினம்!

 

“தியாகத் தலைவர்களின் வீரச்சரித்திரத்தை நினைவுகூற வேண்டிய நாள்” – ‘பவள’ சுதந்திர தினம்!

ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெற்று நாளையோடு 74 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்திய திருநாடு 75ஆம் சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கிறது. 25,50ஆம் ஆண்டு என்ற வரிசையில் 75ஆம் ஆண்டும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. சுதந்திர தின பவள விழாவாக நிலைப்பெற்றுள்ளது. இதுவரை இல்லாமல் இந்தாண்டு ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களையும் ஸ்பெஷலான தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் கிடைத்த பதக்கங்கள், குறைந்துவரும் கொரோனா பரவல், பவள விழா என இந்தாண்டு சுதந்திர தின விழா களைகட்டியுள்ளது. இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாட நாடே தயாராகி வருகிறது.

“தியாகத் தலைவர்களின் வீரச்சரித்திரத்தை நினைவுகூற வேண்டிய நாள்” – ‘பவள’ சுதந்திர தினம்!

இச்சூழலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துக்குறிப்பில், “இந்தியத் திருநாடு வெள்ளையர் ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்று 75ஆம் ஆண்டு தொடங்குகிறது. சுதந்திர இந்தியாவில் நாமெல்லாம் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு வழி ஏற்படுத்திய தியாகத் தலைவர்களின் தியாக உள்ளங்களின் வீரச்சரித்திரத்தை நினைவு கூற வேண்டிய நாள் இந்த நாள். அவர்களின் தியாகத்தைப் போற்ற வேண்டிய நாள் இந்த நாள்.

“தியாகத் தலைவர்களின் வீரச்சரித்திரத்தை நினைவுகூற வேண்டிய நாள்” – ‘பவள’ சுதந்திர தினம்!

இன்று இந்தியா உலக அரங்கில் வீறுகொண்டு எழுந்துள்ளது. வெளியுறவு தேச பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, நவீனம், டிஜிட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு, சுகாதாரம், மக்கள் நலன் என அனைத்து துறைகளிலும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலகமே வியக்கும் சாதனைகளைப் புரிந்து வருகிறது.

Image

கொரோனாவை முற்றிலும் ஒழித்து உலகிலேயே அதிக மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள நாடாக இந்தியா விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்படும் உயர்ந்த நிலைக்கு நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. எதிர்கால இந்தியா மட்டுமல்ல உலகமே இளைஞர்கள் கையில். அவர்களின் சிந்தனையால், செயல்பாடுகளால், நவீன கண்டுபிடிப்புகளால் நம் நாட்டை மேலும் மேலும் உயர்த்துவோம். பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.