அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்

வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசுக்களுக்காக தனி மருத்துவமனை ஒன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் நாட்டிலேயே முதல் முறையாக பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் வடகிழக்கு மாநிலமான அசாமில் பசுக்களுக்கென தனி மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்
பசு மருத்துவமனை

வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக அசாமில் பசு மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. அசாமின் திப்ருகரில் ஸ்ரீ கோபால் கவுசாலா என்ற பசு முகாம் உள்ளது. இந்த முகாமில் 368 பசுக்கள் பராமரிக்கப்படுகிறது. ஸ்ரீ கோபால் கவுசாலா ரூ.17 லட்சம் செலவில் பசு மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அமைக்கப்பட்ட முதல் பசு மருத்துவமனை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

அசாமில் பசுக்களுக்கு தனி மருத்துவமனை ஆரம்பம்… பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் பசு பாசம்
பசுக்கள்

ஸ்ரீ கோபால் கவுசாலாவின் மேலாளர் நிர்மல் பேடியா கூறுகையில், ரூ.17 லட்சம் செலவில் சுர்பி ஆரோக்யாஷாலா என்று பசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோபாஷ்டமியின் புனித நிகழ்வில் வடகிழக்கில் பசுக்களுக்கான முதல் மருத்துவமனையை நாங்கள் துவக்கி வைத்துள்ளோம். இந்த மருத்துவமனை 30 கி.மீட்டர் சுற்றளவில் இந்த மருத்துவமனை சேவை வழங்கும் என்று தெரிவித்தார்.