கறிவேப்பிலை செடிக்கு ஆசைப்பட்டு கழிவு நீர் தொட்டியில் சுருண்டு விழுந்த சினை பசு

 

கறிவேப்பிலை செடிக்கு ஆசைப்பட்டு கழிவு நீர் தொட்டியில் சுருண்டு விழுந்த சினை பசு

கறிவேப்பிலை செடியை திண்ணும் ஆவலில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து பசு மாட்டின் உடல் முழுவதும் மண் மூடிய நிலையில் சுமார் 20 நிமிடங்ளில் பள்ளத்திலிருந்து போராடி மீட்ட சம்பவம் அயப்பாக்கம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் அடுத்த ஐயப்பன் நகர், முருகன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் உறை கிணற்றில் பசுமாடு ஒன்று விழுந்து கிடப்பதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கறிவேப்பிலை செடிக்கு ஆசைப்பட்டு கழிவு நீர் தொட்டியில் சுருண்டு விழுந்த சினை பசு

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமையில் 8 பேர் கொண்ட குழு
7 அடி ஆழம் 3 அடி அகலம் கொண்ட சிறு பள்ளத்தில் சினை பசுமாடு உள்ளே விழுந்து பூமிக்குள் மண் மூடி பாதி புதைந்த நிலையில் இருந்தது.

தீயணைப்பு வீரர்கள் லாவகமாக உரை கிணற்றை அகலமாக தோண்டி உள்ளே இறங்கி, பசு மாட்டின் கழுத்து, தலை, கால்கள் உள்ளிட்ட பகுதியில் கயிறு மூலம் பசு மாட்டை கட்டி மேலே எடுத்தனர்.

கறிவேப்பிலை செடிக்கு ஆசைப்பட்டு கழிவு நீர் தொட்டியில் சுருண்டு விழுந்த சினை பசு

இந்த பசு, 5 மாதமாக சினையாக இருந்ததும், கறிவேப்பிலையை திண்ணும் ஆவலில் தாவியதில் குழிக்குள் அகப்பட்டதும் தெரியவந்தது. பசுவை இலாவகமாக மீட்ட மீட்புக்குழுவினர் 15 நிமிடத்தில் பசுமாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டு வெளியே விட்டனர். சிறு சிராய்ப்பு மற்றும் காயங்களுடன் மீட்கப்பட்ட பசுமாடு பள்ளத்தில் இருந்து வெளியே எடுத்ததும் வழக்கம்போல் புல்வெளியில் மேய்ந்தது.

உடனடியாக விரைந்து வந்து சமயோசிதமாக செயல்பட்டு சினைப் பசுவை மீட்ட மீட்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.