“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து..” -கூரியர் பாய் பண்ண வேலையால கொதிக்கும் தொழிலதிபர்

“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து..” -கூரியர் பாய் பண்ண வேலையால கொதிக்கும் தொழிலதிபர்

ஒரு கூரியரில் வேலை பார்க்கும் டெலிவரி நபர், ஒருவர் அனுப்பிய பார்சலில் இருந்த நகைகளை திருடியதால் கைது செய்யப்பட்டார்.

“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து..” -கூரியர் பாய் பண்ண வேலையால கொதிக்கும் தொழிலதிபர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலபார் மலையைச் சேர்ந்த 53 வயதான பராஸ் பன்சாலி, என்ற தொழிலதிபர் ஆன்லைன் கூரியர் ஆப் மூலம் வெள்ளி ஆபரணங்களை டிசம்பர் 10ம் தேதி அனுப்பினார் .அதை டெலிவரி எடுக்க, கூரியர் நிறுவனத்தை சேர்ந்த 36 வயதான இம்ரான் ரபீக் சயா,என்பவர் வந்தார். .அப்போது அவர் அந்த பார்சலை அவர் எடுத்துக்கொண்டு போகும்போது அது தங்க நகைகள் என்று நினைத்து அதை பிரித்தார் .ஆனால் அதற்குள் வெள்ளி நகைகள் இருப்பதை பார்த்து அதை திருடிக்கொண்டார் அவற்றின் மதிப்பு 143000 ரூபாய் என்று கணக்கிடப்பட்டது .
பின்னர் அந்த பார்சலை அனுப்பிய பன்சாலி அந்த பார்சல் டிசம்பர் 18ம் தேதி வரை தான் அனுப்பியவருக்கு போய் சேராததால் அவர் போலீசில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள் .அப்போது அவர்கள் கூரியர் நிறுவனத்திடம் நடத்திய விசாரணையில் அந்த கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரபீக் என்பவர் அந்த பார்சலை பிரித்து வெள்ளி நகைகளை கொள்ளையடித்துள்ளது தெரிய வந்தது .அதன் பின்னர் அந்த ரபீக்கை போலீசார் கைது செய்து விசாரித்த போது அவர் தான் நகைகளை திருடிய உண்மையை ஒப்புக்கொண்டார் ,பின்னர் போலீசார் அவரோடு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த ஒரு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரம் மதிப்புள்ள நகைகளை மீட்டார்கள் .

“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து..” -கூரியர் பாய் பண்ண வேலையால கொதிக்கும் தொழிலதிபர்