தங்கம், வைரம், பணம் அடங்கிய புதையல் – நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த நியூயார்க் தம்பதிக்கு பாராட்டு

தங்கம், வைரம், பணம் அடங்கிய புதையல் – நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த நியூயார்க் தம்பதிக்கு பாராட்டு

நியூயார்க்: தங்கம், வைரம், பணம் அடங்கிய புதையலை நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த நியூயார்க் தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நியூயார்க்கை சேர்ந்த ஒரு தம்பதியரின் வீட்டு பின்புற தோட்டத்தில் 4 உலோக பெட்டிகளை கண்டுபிடித்தனர். அதை உடைத்துப் பார்த்தபோது அந்த தம்பதியினர் ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர். அந்தப் பெட்டிக்குள் 52 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம், தங்கம் மற்றும் வெள்ளி போன்றவை இருந்தன. இதைத் தொடர்ந்து, இந்தப் பொருட்களுக்கு சொந்தமானவரிடம் ஒப்படைக்க தம்பதியினர் முடிவு செய்தனர்.

தங்கம், வைரம், பணம் அடங்கிய புதையல் – நேர்மையாக போலீசிடம் ஒப்படைத்த நியூயார்க் தம்பதிக்கு பாராட்டு

அதனால் இந்த புதையல் குறித்து போலீசாருக்கு அவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 6 மாதங்களாக இந்தப் பொருட்களின் சொந்தக்காரரை தேடும் பணியில் நியூயார்க் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இந்தப் பொருட்களை விற்று அதை மருத்துவமனை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்தனர். தங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள புதையல் கிடைத்தும் அதை திருடிக் கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைக்க முயன்ற தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.