‘ரூ.8 கோடி மதிப்பிலான சொத்தினை’ கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

‘ரூ.8 கோடி மதிப்பிலான சொத்தினை’ கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே ரூ.8 கோடி பூர்வீக சொத்தை ஒரு தம்பதி, புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடன் பிறந்த சகோதரனாக இருந்தாலும் ஒரு அடி தள்ளி வீடு கட்டிக் கொண்டால், வெட்டி மடியும் காலம் இது. சொத்து என்று வந்து விட்டால் சொந்த பந்தம் எல்லாமே அடுத்த பட்சம் தான். இத்தகைய காலகட்டத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி ஒருவர், தங்களது சொத்தை புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு எழுதி வைத்த சம்பவம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

‘ரூ.8 கோடி மதிப்பிலான சொத்தினை’ கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

ஹைதராபாத்தை சேர்ந்த தம்பதி கே.வி.சுப்பாராவ்- பிரமிளா ராணி. இவர்களுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் கும்மிடிப்பூண்டி அருகே, சூரப்பூண்டி கிராமத்தில் இருக்கிறது. அந்த இடத்தை அவர்கள், அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு தானம் செய்துள்ளனர். அந்த இடத்தின் மதிப்பு தற்போது ரூ.8 கோடியாம். கடந்த 1974 ஆம் தேதி சுப்பாராவின் தந்தை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்க முடியாததால் அவர் உயிரிழந்துள்ளார்.

‘ரூ.8 கோடி மதிப்பிலான சொத்தினை’ கேன்சர் மருத்துவமனைக்கு எழுதி வைத்த தம்பதி: நெகிழ்ச்சி சம்பவம்!

அவரது நினைவாக இந்த நிலத்தை கேன்சர் சிகிச்சை மையத்துக்கு கொடுப்பதாகவும் கேன்சர் நோய்க்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்க இந்த நிலம் பயன்படும் என்றும் அந்த தம்பதி தெரிவித்துள்ளனர். ஒரு ரூபாயாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் மக்கள் வாழும் இக்காலக்கட்டத்தில், இந்த தம்பதி செய்த செயல் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.