18 பேரை பலிவாங்கிய கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி வழக்கு!

18 பேரை பலிவாங்கிய கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி வழக்கு!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 191 பயணிகளுடன் துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கு காரணம் அதீத நம்பிக்கையில் விமானி சுயமாக முடிவெடுத்து தவறான ஓடு பாதையில் இறங்கியது தான் என கருப்பு பெட்டியின் மூலம் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பெரிய விமானங்கள் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

18 பேரை பலிவாங்கிய கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி வழக்கு!

இந்த விமான விபத்து பற்றி விசாரணை நடத்த கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் நான்கு நிபுணர்கள் உள்ள விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் ஐந்து மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

18 பேரை பலிவாங்கிய கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி வழக்கு!

இந்நிலையில் விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தை மூடக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. விமானம் இரண்டாக உடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.