ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

 

ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

சில தினங்களுக்கு முன் HBO Max நிறுவனம் ஹாரிபாட்டர் தொடர் ஒன்றை ஆரம்பிக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டது. வெளியிட்ட சில நிமிடங்களிலேயே தொடர் தயாரிப்பை தள்ளிப்போடுவதாக அறிவித்தது. காரணம் ஹாரிபாட்டர் நாவலாசிரியர் ஜேகே ரௌலிங்.

அவருக்கு எதிராக ட்விட்டரில் எழுந்த எதிர்ப்பலையே தயாரிப்பை தள்ளிவைக்க செய்துள்ளது. அவர் நாம் வாழும் காலத்தில் வாழும் சிறந்த நாவலாசிரியர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் தீவிர மூன்றாம் பாலின வெறுப்பாளர். கடந்த காலங்களில் திருநங்கைகள் குறித்த அவரின் பார்வை வன்மம் கொண்டதாகவே இருந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

இதன் காரணமாக ஜேகே ரௌலிங்குக்கு (ராயல்ட்டி தொகை) காசு கொடுக்கும் எந்தப் படத்தையும், வெப் சீரிஸையும் நாங்கள் பார்க்க மாட்டோம் என மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தை இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், இந்தியாவிலும் சாதிய வன்மத்தாலும் மத வன்மத்தாலும் லைம்லைட்டில் இருக்கும் பலரும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசுகின்றனர். அவர்களுக்கு எதிராக இங்கே யாரும் பொங்குவதில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களை இழிவுப்படுத்தும் விதமாகப் பேசி ஹாயாக சுற்றுகிறார்கள்.

அதன் சமீபத்திய உதாரணம் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினும், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதரும் கூறிய ஒரு வார்த்தை தான். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்த ஒரு உரையாடலில் அஸ்வினும், ஸ்ரீதரும் மிகச் சாதாரணமாக சாதிய சொல்லாடலை உபயோகித்தனர். ஆஸ்திரேலியாவில் தங்களை இனவெறியுடன் தாக்கினார்கள் என்று திமிறி எழுந்த அஸ்வின், இன்று சாதியைக் கொண்டு இழிவுப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பது நகைமுரண்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

ட்விட்டரில் சிறிய அளவில் எதிர்ப்பு கிளம்பியவுடன் சம்பந்தப்பட்ட அந்த வார்த்தை நீக்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை. ஸ்டாலின் வேல் தூக்கிய விவகாரத்தில் பிஸியாக இருக்கும் அரசியல்வாதிகள், அந்த வீடியோவை பார்த்தார்களா என்று கூட தெரியவில்லை. யாரும் மூச்சு கூட விடவில்லை.

இச்சூழலில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அஸ்வின் மீது கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரில், “நான் இந்து ஆதிதிராவிடன். ஆஸ்திரேலியா வீரர்கள் குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், கோச் ராமச்சந்திரன் ஸ்ரீதர் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் வீடியோவைப் பார்த்தேன்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

வீடியோவில், ராமச்சந்திரன் ஸ்ரீதர், “அவன் 'பற கேடி' என்று அஸ்வினிடம் சொல்லிச் சிரிக்கிறார். அதற்கு அஸ்வினோ,அவன் பற கேடியோ இல்லை… என்னவோ தெரியலை.. அவன் எங்க மூஞ்சிய பார்த்து சொல்லாம விட்டானோ தெரியல” என்று அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் எங்கள் சமூகத்தை இழிவாகப் பேசியிருக்கிறார்கள். இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது என்ன ஆயுள் தண்டனை விதிக்கும் அளவுக்கு பெருங்குற்றமா என்று நிறைய பேர் கேட்பதாகக் கூறப்படுகிறது. நம் அரசியலமைப்பு அனைத்து மக்களும் சமம் என்ற கூற்றை முன்னிறுத்துகிறது. சாதியாலும் மதத்தாலும் இழிவுப்படுத்துவதை குற்றமாகவே கருதுகிறது. நிச்சயமாக தண்டனைக்குரிய குற்றம் தான்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதிய பேச்சு… கைது நடவடிக்கை எப்போது?

அதுவும் நாட்டு மக்களுக்கே நன்கு பரிட்சயமான நபர் ஒருவர் இப்படி ஒரு வார்த்தையை உபயோகித்திருக்கிறார். இதனை எத்தனை கோடி மக்கள் பார்த்திருப்பார்கள். சாதாரணமான வார்த்தைகள் கூட மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். ஆகவே, இந்த விவகாரத்தில் அஸ்வின் மற்றும் ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுத்து, சாதிய வன்மத்துடன் பேசும் ஒவ்வொருவருக்கும் குட்டு வைக்க வேண்டும்.

அஸ்வினை சொல்லிவிட்டு நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆதிக்க சாதியினரின் வீட்டில் சொந்தக்காரர்களை ஏதோ ஒரு வகையில் இழிவுப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியையும் அவர்களின் வேலையும் கூறி திட்டும் வழக்கம் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மிக முக்கியமான சமூகப் பிரச்சனையாகக் கருதி இதனைக் களைய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.