கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளியுங்க.. நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளியுங்க.. நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனால் கடந்த மார்ச் மத்தி முதல் நாடு அனைத்து பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகள் நடத்த முடியாத காரணத்தால் பெரும்பாலான மாநிலங்களில் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளியுங்க.. நீதிமன்றத்தில் வழக்கு

இதனால் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க இன்னும் 2 மாதங்கள் ஆனாலும் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளிக்க வேண்டும் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளியுங்க.. நீதிமன்றத்தில் வழக்கு

கல்கத்தா உயர் நீதிமன்றத்தில், கோவிட்-19 வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில் விலக்கு அளிக்கக்கோரி வழக்கறிஞர் திப்ரீவால் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாக 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியம் என நீதிமன்றத்தில் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிமன்ற அமர்வு இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.