ஷாரூக்கானுக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓர் அழைப்பு – எதற்கு தெரியுமா?

ஷாரூக்கானுக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓர் அழைப்பு – எதற்கு தெரியுமா?

டி20 போட்டிகள் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்துவிட்டன. குறுகிய நேரத்தில் ஒரு போட்டியைக் கண்டுகளித்து முடிவையும் தெரிந்துகொள்ள முடியும் என்பது இதற்கு முன் இல்லாதது.

டி20 போட்டியின் கமர்சியல் வடிவம் ஐபிஎல் போட்டி. ஒரு சினிமாவைப் பார்க்கும் ஆவலை இந்தப் போட்டிகள் மூலம் ஏற்படுத்தின. மேலும் அந்தந்த மாநிலங்களின் ரசிகர்களை ஈர்க்க அந்த மாநிலத்தின் பெயரின் அணிகள் பிரிக்கப்பட்டன.

ஷாரூக்கானுக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓர் அழைப்பு – எதற்கு தெரியுமா?

விளையாட்டுப் போட்டியின் நடுவே உற்சாகப்படுத்தும் கேளிக்கை கொண்டாட்டாங்களும் நிரபப்பட்டன. இது முழு வடிவமாக கொண்டு வரப்பட்டது உலகம் முழுவதுமே இதுபோன்ற ஆட்டங்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டு நடத்தி வருகின்றன.

நம் அண்டை நாடான இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் எனும் பெயரில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்ட்டில் நடக்க திட்டமிட்டிருந்த லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் கொரோனா பரவலைக் கணக்கில் கொண்டு ஒத்தி வைக்கப்பட்டன.

ஷாரூக்கானுக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓர் அழைப்பு – எதற்கு தெரியுமா?

தற்போது நவம்பர் 14-ம் தேதி லங்கா பிரிமீயர் லீக் போட்டிகள் தொடங்கும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவைப் போல வேறெங்கும் இந்த வகை போட்டிகளுக்கு பெரும் மதிப்பும் வியாபாரமும் ஆவதில்லை.

இந்தியாவில் அனைத்து அணிகளையும் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்.

ஷாரூக்கானுக்கு இலங்கை கிரிக்கெட்டிலிருந்து ஓர் அழைப்பு – எதற்கு தெரியுமா?

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆடும் போட்டிகளின்போது பார்வையாளராக வந்து வீரர்களை உற்சாகப்படுத்துவார்.

தற்போது ஷாரூக்கானை, லங்கா பிரிமியர் லீக் போட்டியில் கலந்துகொள்ளும் ஓர் அணியை வாங்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது. இலங்கையின் அழைப்பை ஷாரூக்கான் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.