மூணாறு நிலச்சரிவில் சிக்கிய சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: பலி எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

 

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: பலி எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டத்தின் கயத்தாறு பகுதியில் இருந்து வேலைக்காக சென்றவர்கள் உட்பட 80 பேர் சிக்கினர். தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 15 பேரை நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்டனர். அதற்குள்ளாகவே 14 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர். தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்காக, எஸ்டேட் சார்பில் கட்டிக் கொடுத்த 20க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முழுவதுமாக சேதமடைந்தன.

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: பலி எண்ணிக்கை 59 ஆக அதிகரிப்பு!

இதனையடுத்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொய்வின்றி தொடர்ந்தது. முதலில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டதைத்தொடர்ந்து வேறு யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. கடந்த 16 ஆம் தேதி நிலவரத்தை பொறுத்தவரையில் 58 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி, ஆற்றில் தள்ளப்பட்ட சிறுவனின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டதால் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.