வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி.. மாஞ்சா நூலால் காயமடைந்த சிறுவன்; அதிரடியாக கைது செய்த போலீசார்!

வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி.. மாஞ்சா நூலால் காயமடைந்த சிறுவன்; அதிரடியாக கைது செய்த போலீசார்!

ஊரடங்கை சமாளிக்க மக்கள் பல பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பட்டம் விடுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. முக்கியமாக சென்னை மற்றும் வட சென்னை பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகமாக மாஞ்சா நூல் வைத்து பட்டம் விட்டு வருகின்றனர். அந்த மாஞ்சா நூல் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு மாஞ்சா நூலால் மூக்கு மற்றும் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி.. மாஞ்சா நூலால் காயமடைந்த சிறுவன்; அதிரடியாக கைது செய்த போலீசார்!

இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர் பட்டம் விட்டதும், வாட்ஸ் ஆப் மூலம் மாஞ்சா செய்வதற்கான மூலப்பொருட்களை அவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணையை தொடர்ந்துள்ளனர். அப்போது பிரபாகரன், வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி நடத்தி வந்ததும் அதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டதும் தெரிய.வந்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் பட்டம் விடும் போட்டி.. மாஞ்சா நூலால் காயமடைந்த சிறுவன்; அதிரடியாக கைது செய்த போலீசார்!

அதன் பின்னர் பிரபாகரன் வீட்டில் இருந்த காத்தடிகள், கலர் பேப்பர்கள், மாஞ்சா நூல், மாஞ்சா செய்யும் மூலப் பொருட்கள் என அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பிரபாகரனுக்கு மாஞ்சா மூலப் பொருட்களை விற்பனை செய்த சீனிவாசன் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்த போலீசார், மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.