உத்தர பிரதேசத்தில் மசூதியில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தலைவர்.. மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்

உத்தர பிரதேசத்தில் மசூதியில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தலைவர்.. மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்

உத்தர பிரதேசம் ஆக்ராவில் உள்ள மசூதியில் பா.ஜ.க. தலைவர் ஒருவர் தேசிய கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடியதற்கு அந்த பகுதி காங்கிரஸ் தலைவர் உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் பா.ஜ.க. தலைவர் ஒருவர் மசூதி ஒன்றில் தேசிய கொடி ஏற்றி, தேசிய கீதம் பாடியது தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மசூதியில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தலைவர்.. மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்
ஆஷ்பக் சைபி

உத்தர பிரதேச பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அம்மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான ஆஷ்பக் சைபி, சுதந்திர தினத்தன்று ஆக்ராவில் உள்ள மசூதியில் தேசிய கொடி ஏற்றினார். மேலும் தேசிய கீதத்தை பாடினார். இதற்கு அந்த பகுதி காங்கிரஸ் தலைவரான ஹாஜ் ஜமீலுதீன் மற்றும் மஜ்துல் குபாய் ரூமியின் ஷஹர் முப்தி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆஷ்பக் சைபிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் மசூதியில் தேசிய கொடி ஏற்றிய பா.ஜ.க. தலைவர்.. மிரட்டல் விடுத்த காங்கிரஸ் தலைவர்
வாசீம் ரிஸ்வி

ஆக்ராவின் ஜமா மசூதியில் தேசிய கொடி ஏற்றுவதற்கு மற்றும் தேசிய கீதம் பாடுவது ஹாரம் (தடை செய்யப்பட்ட) என்றும், இது கடவுளின் கோபத்தை அழைக்கும். மசூதி போன்ற ஒரு மத இடத்தை அரசியலாக்க முயன்றால், உத்தர பிரதேசத்தில் முழு சமூகமும் சைபிக்கு எதிராக மாறும் என்று ஜமீலுதீன் தெரிவித்தார். அதேசமயம், உத்தர பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியத்தின் தலைவர் வாசீம் ரிஸ்வி கூறுகையில், நமது தேசிய கொடியை அதன் சொந்த நிலத்தில் ஏற்ற முடியாவிட்டால், இந்த தீவிரவாதிகள் மற்றும் மதகுருமார்கள் போன்றவர்கள் தங்களது மசூதிகளுடன் ஜாகிர் நாயக் போல் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தார்.