ரூ.90,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவம்!

 

ரூ.90,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவம்!

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10ஆயிரம் வீதம் 9வது முறையாக 90ஆயிரம் ரொக்க பணத்தினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் மனைவி இறந்தபின்பு பொதுசேவையில் அதிக ஆர்வம்கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார்.

ரூ.90,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவம்!

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்க தொடங்கி தற்போது வரை 9 முறை பத்தாயிரம் வீதம் மொத்தமாக இதுவரை 90 ஆயிரம் ரூபாய் யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை பாராட்டி சமூகசேவைக்கான விருதினை நாட்டின் 64வது சுதந்திர தினத்தன்று அவரை நேரில் அழைத்து விருது வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கவுரவித்தார். நான் எதையும் எதிர்பார்த்து இந்த உதவியை செய்யவில்லை எனவும் எனது செயலை பாராட்டி விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் பூல்பாணியன் தெரிவித்தார்.