‘குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை’ – வானிலை ஆய்வு மையம்

 

‘குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை’ – வானிலை ஆய்வு மையம்

பொங்கல் பண்டிகை முடியும் வரை தமிழகத்தில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வியாபாரிகள் பொங்கல் பண்டிகைக்கு வியாபாரம் செய்ய முடியாமலும், விவசாயிகள் மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி இருப்பதாலும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கின்றனர். லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கி இருப்பதாக தெரிகிறது.

‘குமரி அருகே உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை’ – வானிலை ஆய்வு மையம்

இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உருவாகி இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே நிலை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.