தாய், தந்தை செய்த தவறு! காப்பகத்தில் 9 வயது சிறுமி…

வேலூர் அருகே 9 வயது சிறுமியை தவிக்கவிட்ட ரவுடி மற்றும் அவரது மனைவி தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜானி(34), இவருக்கு திருமணம் ஆகி ஷாலினி(26) என்ற மனைவியும், 9-வயது பெண் குழந்தையும் உள்ளது. ரவுடி ஜானி மீது காட்பாடி காவல் நிலையம் உட்பட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவுடி ஜானி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். தனிப்படை அமைத்த வேலூர் மாவட்ட காவல் துறையினர் தொடர்ந்து ஜானியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் ஜானியின் மனைவி ஷாலினி, தனது கணவரான ஜானிக்கு மறைமுகமாக அனைத்து உதவிகளும் செய்து வந்ததாக காட்பாடி காவல் துறையினருக்கு வந்த தகவலையடுத்து கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஷாலினியை காவல் துறையினர் கைது செய்து தொரப்பாடியில் உள்ள பெண்கள் தனி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் ஷாலினிக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தினந்தோறும் அவர் காட்பாடி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் ஜானியின் மனைவி காட்பாடி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. மேலும் இவர்களுக்கு உள்ள 9 வயது பெண் குழந்தையை விட்டுவிட்டு ரவுடி ஜானியுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஷாலினியின் தந்தை குழந்தையை பராமரிக்க முடியாத காரணத்தால் அரியூரில் உள்ள தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்துள்ளார். அங்கு குழந்தை தாயை பிரிந்த ஏக்கத்தினால் உணவு உண்ணாமல் அழுது கொண்டே இருப்பதாக தொண்டு நிறுவன ஊழியர்கள் கூறியுள்ளனர். பெண் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலை படாமல் அனாதையாக விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ள ரவுடி ஜானி மற்றும் ஜானியின் மனைவி ஷாலினியை போலீசார் தேடி வருகின்றனர்.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...