“என்னை அடிக்கடி அதுக்கு கூப்பிடுகிறார்கள்” -அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அலறல் ..

பணியிடத்தில் பெண்களுக்கு நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர ,குறைந்த பாடில்லை .இதற்கு உதாரணமாக டெல்லியிலுள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு நடந்த சம்பவத்தினை கூறலாம் .

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் பராமரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரியும் ஒரு 31 வயது பெண்ணை அங்கு தன்னோடு பணிபுரியும் இரண்டு ஆண்கள் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக அந்த பெண் போலீசில் புகாரளித்துள்ளார் .மேலும் அவர்கள் தன்னை அங்கு பணிபுரிய விடாமல் தொடர்ந்து தொல்லை தருவதால் மிகுந்த மனஉளைச்சலில் தான் இருப்பதாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார் .

இந்த வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரித்தபோது ,அந்த இரண்டு ஆண்களும் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் என்று தெரிய வந்துள்ளது .மேலும் அந்த பெண் கொடுத்த புகாரை வெள்ளிக்கிழமையன்று பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,புகாரில் உணமையிருந்தால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்கள் .

Most Popular

கொரோனா சிகிச்சைக்கு ரூ. 7 லட்சம் கட்டணம் : தனியார் மருத்துவமனைக்கு அரசு அனுமதி தற்காலிக ரத்து!

தமிழகத்தில் முதற்கட்டமாக கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது. ஆனால் நாளாக நாளாக தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை க்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 112 தனியார்...

ஆன்லைன் ரம்மிக்கு அடிமை… கடன் வாங்கி விளையாட்டு!- திருச்சி காவலர் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான காவலர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் வாங்கி விளையாடியதால், கடன் கொடுத்தவர்கள் கேட்டதால் மனஉளைச்சலில் இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை,...

“அம்மா அந்த இடத்துல வலிக்குது” பக்கத்து வீட்டுக்காரரால் பலாத்காரம் செய்யப்பட்ட நாலு வயது சிறுமியின் அழுகையால் அலறிய அப்பார்ட்மெண்ட்

மும்பை நாக்பாடா பகுதியில் ஒரு நாலு வயது சிறுமியை ஒரு அம்மா வீட்டில் தனியே விட்டு விட்டு சென்ற வாரம் வேலைக்கு சென்றுள்ளார் ,அந்த சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்துள்ளார் . அப்போது...

குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ்… அம்மாவுக்கு நெகட்டிவ். தாய்ப்பால் கொடுக்கலாமா? – மருத்துவர் விளக்கம்

கொரோனா நோய்த் தொற்று பலவித சந்தேகங்களை மக்களிடம் நாள்தோறும் தோன்றச் செய்துகொண்டே இருக்கிறது. ஏனெனில், நோய்த் தொற்றால் புதிய நோயாளிகள் தினமும் அதிகரித்து வருகின்றனர். குணமடைபவர்களின்  சதவிகிதம் அதிகம். ஆனாலும் இறப்போர் எண்ணிக்கையும்...