அரிய நோயால் குழந்தை தோற்றத்தில் காட்சியளிக்கும் 25 வயது பெண்… சிகிச்சைக்கு உதவ தந்தை கோரிக்கை!

 

அரிய நோயால் குழந்தை தோற்றத்தில் காட்சியளிக்கும் 25 வயது பெண்… சிகிச்சைக்கு உதவ தந்தை கோரிக்கை!

திண்டுக்கல்

திண்டுக்கலில் அரிதான நோயால் குழந்தை தோற்றத்தில் 25 வயது பெண் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரது மருத்துவ செலவுக்கு உதவுமாறு தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் புளியராஜக்காபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன் (55). கொய்யாப்பழ வியாபாரி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுகு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது 2-வது மகள் சுதா. இவருக்கு பிறவியிலேயே உடல் மற்றும் மன வளர்ச்சி இல்லை. தற்போது 25 வயதாகும் நிலையில், சுதா தோற்றத்தில் குழந்தை போலவே காட்சியளிக்கிறார். மேலும், இவருக்கு பேச்சு திறன், செவித்திறனும் கிடையாது. சுயமாக நடக்கவோ, நீண்டநேரம் உட்காரவோ முடியாது.

அரிய நோயால் குழந்தை தோற்றத்தில் காட்சியளிக்கும் 25 வயது பெண்… சிகிச்சைக்கு உதவ தந்தை கோரிக்கை!

இதனால், கை ஜாடை மூலம் தனக்கு தேவையானவற்றை கேட்பார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி உயிரிழந்த நிலையில், அவரை கவனித்து வந்த மற்ற 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. இதனால், தந்தை காளியப்பன் பழ வியாபாரத்தை கைவிட்டு, மகளை கவனித்து வருகிறார். வருமானம் இல்லாத நிலையில், சுதாவிற்கு மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து பேசிய காளியப்பன், போதிய வருமானம் இல்லாததால் சுதாவிற்கு மருத்துவ செலவு, சத்தான உணவு வாங்கி கொடுக்கக் கூட முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார். எனவே, தனது மகள் சுதாவின் மருத்துவ செலவுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.