3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த 12 வயது ஹைதராபாத் சிறுவன்..

 

3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த 12 வயது ஹைதராபாத் சிறுவன்..

தெலங்கானாவில் 12 வயது சிறுவன் ஒருவன் 3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த செயல் பலரது கவனத்தையும் ஈர்த்தெடுத்துள்ளது.

பொதுவாக ஒவ்வொருவரும் பிறந்த நாளன்று நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடுவா். பிறந்தநாளன்று பலரும் பல நல்ல காரியங்களை செய்வதில் மகிழ்ச்சி அடைவர். அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு போன்ற இடங்களுக்கு சென்று அவர்களுக்கு உணவளிப்பது, கோயில்களில் அன்னதானம் செய்வது போன்ற செயல்களை செய்வர். சிலர் மரம் நடுவது போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளிலும் ஈடுபடுவது வாடிக்கை.

3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த 12 வயது ஹைதராபாத் சிறுவன்..
புலியை தத்தெடுத்த சிறுவன் சின்மய் தனது குடும்பத்தினருடன்

ஆனால் இதற்கெல்லாம் மாறாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சிறுவன் தனது பிறந்தநாளை முன்னிட்டு 3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த செயல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சிறுவன் சின்மய் சித்தார்த் ஷா தனது பிறந்தநாள் செலவின தொகையை கொண்டு அந்நகரில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள பெங்கால் புலியை தத்தெடுக்க முடிவு செய்தார். இதனையடுத்து சின்மய் சித்தார்த் ஷா தனது தந்தையுடன் நேரு விலங்கியல் பூங்காவுக்கு சென்றார்.

3 மாதத்துக்கு புலியை தத்தெடுத்த 12 வயது ஹைதராபாத் சிறுவன்..
நேரு விலங்கியல் பூங்கா

நேரு விலங்கியல் பூங்காவில் பூங்கா கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்று துணை கண்காணிப்பாளர் நாகமணியை சந்தித்து அவரிடம் அங்குள்ள சங்கல்ப் என்ற ராயல் பெங்கால் புலியை 3 மாதம் தத்தெடுப்பதற்காக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை சின்மய் சித்தார்த் ஷா கொடுத்தார். புலியை தத்தெடுத்த சிறுவனின் செயலை அதிகாரி நாகமணி பாராட்டினார்.