பழனி மலைக்கோயிலில் உலாவிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது…

 

பழனி மலைக்கோயிலில் உலாவிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது…

திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் உலாவி வந்த வந்த 12 அடிநீளமுடைய மலைப்பாம்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலின் ரோப் கார் நிலையம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று உலாவி வந்தது. இதனால் ரோப் கார் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை ரோப் கார் மூலம் மலைக்கு செல்ல வந்த பக்தர்கள் மலைப்பாம்பை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பழனி மலைக்கோயிலில் உலாவிய 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது…

இதனை அடுத்து உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மலையில் உள்ள மரத்தில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு, பின்னர் அடர்ந்த வனப்பகுக்குள் பத்திரமாக கொண்டு விடப்பட்டது. மலைகோயிலில் உலாவி வந்த மலைப்பாம்பு பிடிபட்டதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.