‘A-1 கறிக்கஞ்சி கடை’… விலையில் இருந்து விற்கிற உணவுகள் வரை எல்லாமே அதிர்ச்சி ரகம்!

‘A-1 கறிக்கஞ்சி கடை’… விலையில் இருந்து விற்கிற உணவுகள் வரை எல்லாமே அதிர்ச்சி ரகம்!

மேலப்பாளையம் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது ஏ-1 மொய்தீன் நடத்தும் இந்தக் கஞ்சிக்கடை.ஞாயிறு மட்டும் விடுமுறை,மற்ற ஆறு நாளும் ஜே.ஜே என்று களைகட்டுகிறது வியாபாரம்.அதுவும் சனிக்கிழமை சகல ஐட்டங்களும் இருக்கும் என்பதால்,அன்று இன்னும் அதிகக் கூட்டம் வருகிறது.

kari

இங்கே பொறித்த மத்தி மீன்,பெப்பர் சிக்கன்,சில்லிச் சிக்கன்,பீஃப் ஃபிரை, நண்டு, சிக்கன் கட்லெட்,பீஃப் பக்கோடா,பீஃப் வடை, மாட்டு வால் சூப், புரோட்டாவுடன் கறிக்கஞ்சியும் தருகிறார்கள். ரமலான் நோன்புகாலத்தில் இஸ்லாமியர்கள் தயாரிக்கும் அதே கஞ்சிதான்.கொத்திய இறைச்சியுடன் மசாலாக்கள் மற்றும் அரிசி,பருப்புச் சேர்த்து செய்யப்படும் இந்தக் லஞ்சி ஒரு கப் 13 ரூபாய்தான்.

chicken

கறிக்கஞ்சி மட்டுமல்ல இங்கே விற்கப்படும் எல்லா ஐட்டங்களுமே விலை மலிவோ மலிவு. இங்கு வழக்கமாக வரும் மொய்தீனின் வாடிக்கையாளர்கள் பீஃப் வடைகளை வாங்கி உதிர்த்து இந்தக் கஞ்சியுடன் சேர்த்துக் கொள்கிறார்கள். பீஃப் வடைகள்  மூன்று பத்துரூபாய்தான்.மாட்டுவால் சூப் சென்னை போன்ற நகரங்களில் 60 ரூபாய்க்கு விற்கிறார்கள்.இங்கே அதுவும் 13 ரூபாய்தான். இன்னும் சிக்கன் கட்லெட் 5 ரூபாய்.பீஃப் பக்கோடா 20 ரூபாய் என்று மிகமலிவாகத்தான் விலைவைத்து இருக்கிறார்கள்.

chicken

இங்கே விற்கப் படும் கறிவகைகளில் சில்லி சிக்கனும்,பெப்பர் சிக்கனும் மட்டும் நாற்பது ரூபாய்.இவைதான் இருப்பதிலேயே விலையுயர்ந்த ஐட்டங்கள்.
நேரில் வந்து சாப்பிடுபவர்களை விட பார்சல் வாங்கிப் போகிறவர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. 

crab

சனிக்கிழமை வந்தால்,சிக்கன் சமோசா , கோலா மீன் , நண்டு பெப்பர் ஃபிரை போன்ற சிறப்பு ஐட்டங்கள் அன்று மட்டும் கிடைக்கும்.நூறு ரூபாயில் இரண்டு பேர் திருப்ப்தியாகச் சாப்பிடலாம்,ஒரு பிளேட் என்று அவர்கள் தரும் பொரித்த மீனோ,பீஃபோ ஒரு ஆள் சாப்பிடுவது கடினம்.அள்ளித் தருகிறார்கள். போய் சாப்பிட்டால் மட்டும் போதாது ஏ.1 மொய்தீனை இரண்டு வார்த்தை பாராட்டிவிட்டு வாருங்கள்.