’82-ஐ வாழ்த்திய 96’ யாருடைய வாழ்த்தை இப்படிக் குறிப்பிடுகிறார் மருத்துவர் ராமதாஸ்

 

 ’82-ஐ வாழ்த்திய 96’ யாருடைய வாழ்த்தை இப்படிக் குறிப்பிடுகிறார் மருத்துவர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ச. ராமதாஸ்க்கு இன்று பிறந்த தினம். தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துச் செய்தியில், ’இன்று 81-வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

 ’82-ஐ வாழ்த்திய 96’ யாருடைய வாழ்த்தை இப்படிக் குறிப்பிடுகிறார் மருத்துவர் ராமதாஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில், ’இன்று 81 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா அன்புடன் வாழ்த்துகிறேன். உடலும் உள்ளமும், நலமும் திடமும் கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று மாலை, மருத்துவர் ராமதாஸ் அகமகிழ்ந்து ஒரு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருந்தார். அது மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் ஆனைமுத்துவின் வாழ்த்து.

’ 82-ஐ வாழ்த்திய 96!

மார்க்சீய, பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் தலைவரான பெரியவர் ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று எனக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். எனக்கு 82 -ஆவது பிறந்தநாள் என்பதைக் குறிப்பிட்டும், 96 வயதான தாம் வாழ்த்துவதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்’ என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறர்.

 ’82-ஐ வாழ்த்திய 96’ யாருடைய வாழ்த்தை இப்படிக் குறிப்பிடுகிறார் மருத்துவர் ராமதாஸ்

பெரியாருடன் பயணித்தவர் வே.ஆனைமுத்து. சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் 18 மாதங்கள் கடும் சிறைத் தண்டனை அனுபவித்தவர். தம் வாழ்நாள் முழுவதும் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதையே குறிக்கோளாக வைத்திருப்பவர். பிற்படுத்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு முயற்சிகளில் இவரது பங்களிப்பு மகத்தானது. சிந்தனையாளன் எனும் இதழை நடத்தி வருபவர்.