இந்துவே விழித்திடு … பாஜகவின் பதிலடி பிரச்சாரம் #இந்துவே_விழித்திடு

 

இந்துவே விழித்திடு … பாஜகவின் பதிலடி பிரச்சாரம்  #இந்துவே_விழித்திடு

பிஜேபிக்கு எதிராக விவேகானந்தர் சொன்ன கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு, #vivekanandaAgainstBjp என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு பதிலடியாக, #இந்துவே_விழித்திடு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விவேகானந்தரின் 158வது பிறந்த நாளில்தான் இந்த களேபரம் நடந்து வருகிறது.

இந்துவே விழித்திடு … பாஜகவின் பதிலடி பிரச்சாரம்  #இந்துவே_விழித்திடு

விவேகானந்தர் பிறந்தநாளில் இன்று கன்னியாகுமரியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பல்வேறு தரப்பினரும். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் ‘தேசிய இளைஞர் தின வாழ்த்துகள்..’ என தெரிவித்திருக்கிறார்.

பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, “இளைஞர்களுக்கு தாங்கள் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்தால் அவர்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை. ” வீரத்துறவி ஸ்வாமி விவேகானந்தரின் ஜெயந்தி மற்றும் தேசிய இளைஞர்கள் தின விழா வாழ்த்துக்கள்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளவர்,NationalYouthDay #இந்துவே_விழித்திடு என்ற ஹேஷ்டேக்குகளை ஷேர் செய்திருக்கிறார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,
’’விவேகானந்தர் ஜெயந்தி 2021 தேசிய இளைஞர்கள் தினம்.
புதிய இந்தியாவைப் படைக்க, இந்தியாவை உலகின் முதல்நிலை நாடாக உருவாக்க தொடர்ந்து அயராது உழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த இந்நாளில் சபதம் ஏற்போம்! ஒன்றிணைவோம்! வெற்றி பெறுவோம்!!’’ என்று தெரிவித்துள்ளார்.

“காற்று என்னை கரைக்காது
கத்தி என்னை வெட்டாது
தீ என்னை எரிக்காது
நான் சர்வசக்தி வாய்ந்தவன்
என்று நினைத்தால்
நம் லட்சியத்தை எந்த தடையும் இல்லாமல் அடையலாம்”என்றார் விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் நம் வெற்றியின் சக்தியை அறிவோம்.’’ என்று பதிவிட்டுள்ள தெலுங்கனா ஆஅளூதமிழிசை சவுந்தரராஜன், #SwamiVivekanandaJayanti என்ற ஹேஷ்டெக்கினை ஷேர் செய்திருக்கிறார்.

https://twitter.com/Vidhuvarsan2/status/1348858777919918081

#இந்துவே_விழித்திடு – இந்த ஹெஷ்டேக்கினை பிஜேபிக்கு எதிரானவர்களும் ஷேர் செய்து வருகின்றனர்.