அண்ணா அடிக்காதீங்கண்ணா… இந்தியா டிரெண்டிங்கில் #பெண்களின்_எதிரி_அதிமுக

 

அண்ணா அடிக்காதீங்கண்ணா… இந்தியா டிரெண்டிங்கில் #பெண்களின்_எதிரி_அதிமுக

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அதிமுகவினரை குற்றவாளிகள் என்று தெரிந்தும் காப்பாற்ற முயன்றது அதிமுக அரசு என்று குற்றம்சாட்டி #பெண்களின்எதிரிஅதிமுக என்ற ஹேஷ்டேக்கினை டிரெண்டாக்கி இருக்கிறார்கள். இந்திய அளவில் இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனதோடு மட்டுமல்லால் டிரெண்டிங்கில் முன்னணியில் இருக்கிறது.

அண்ணா அடிக்காதீங்கண்ணா… இந்தியா டிரெண்டிங்கில் #பெண்களின்_எதிரி_அதிமுக

தவிர, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள் என்று சொல்லும் திமுக தலைவர், அண்ணா அடிக்காதீங்கண்ணா.. என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது.

அ.தி.மு.க மேலிடத்தின் ஆதரவுடன், அ.தி.மு.கவில் தொடர்புடையவர்களால் நிகழ்த்தப்பட்ட இந்தப் பாலியல் கொடூரத்தை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டித் திசை திருப்பவும், செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்-நிருபர்களையே குற்றவாளிகள் போல விசாரணைக்கு உட்படுத்தி அ.தி.மு.க அரசும் அதன் ஏவல் துறையான காவல்துறையும் செயல்பட்டதை தி.மு.க தொடர்ந்து எதிர்த்து, வலுவான குரல் கொடுத்தும், போராடியும் வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் பிறகும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லாதது கவலை அளித்தது. தாய்மார்களும், பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தாரும் பாதுகாப்பில்லாத சூழலை நினைத்து அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர். கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டதோ பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு என நினைத்த நிலையில், பாபு, ஹெரோன் பால், அருளானந்தம் ஆகிய மூவரை சி.பி.ஐ. இன்று கைது செய்திருக்கும் தகவல் வெளியாகியுள்ளது என்று சொல்லும் ஸ்டாலின்,

அண்ணா அடிக்காதீங்கண்ணா… இந்தியா டிரெண்டிங்கில் #பெண்களின்_எதிரி_அதிமுக

இளம்பெண்களை நம்ப வைத்து, அதன்பிறகு ஏமாற்றி, பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று, பெல்ட்டால் அடித்து சித்ரவதை செய்து, சீரழித்த கொடூரன்களில் மூவர் சிக்கியிருக்கிறார்கள். இதில் பாபுவும், ஹெரோன் பாலும் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்கள். குற்றப் பின்னணியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டவர்கள். தொடர்ச்சியான புலன் விசாரணையின் அடிப்படையில், மூன்றாவதாகக் கைதாகியுள்ள அருளானந்தம் என்பவர் பொள்ளாச்சி அ.தி.மு.க நகர மாணவரணிச் செயலாளர். அ.தி.மு.கவின் பொள்ளாச்சி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் நிழல் போலச் செயல்படுபவர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் நன்கு அறிமுகமாகி, அவரால் வளர்க்கப்பட்டவர். தோண்டத் தோண்ட இன்னும் நிறையத் தொடர்புகள் விசாரணையில் கிடைக்கும் என்கிறார் அழுத்தமாக.

சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.