கொரோனா பாதிப்பில் 10 லட்சம் கடந்த 9-வது நாடு!

 

கொரோனா பாதிப்பில் 10 லட்சம் கடந்த 9-வது நாடு!

உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது கொரோனா வைரஸ். விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்குகள் உட்பல பல விஷயங்களைத் திட்டமிடுதலில் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 856 பேர்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 64 ஆயிரத்து 520 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 21 லட்சத்து 82 ஆயிரத்து 568 நபர்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 10,43,768 பேர்.

கொரோனா பாதிப்பில் 10 லட்சம் கடந்த 9-வது நாடு!

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 89,62,783 பேரும், இந்தியாவில் 79,46,429 பேரும், பிரேசில் நாட்டில் 54,11,550 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவைத் தவிர ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் கொரோனாவின் மொத்தப் பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்துவிட்டது.

கொரோனா பாதிப்பில் 10 லட்சம் கடந்த 9-வது நாடு!

சமீபமாக பத்து லட்சம் கடந்த நாடுகளின் பட்டியல் சேர்ந்திருக்கிறது கொலம்பியா. கொலம்பியாவின் மொத்தப் பாதிப்பு 10,25,052. இவர்களில் 9,24,044 பேர் குணமடைந்துவிட்டனர். 30,348 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஜூலை முதல் வாரம் வரை கொலம்பியாவில் குறைவான எண்ணிக்கையில்தான் புதிய நோயாளிகள் எண்ணிக்கை இருந்தது. இரண்டாம் வாரத்திலிருந்து மளமளவென எண்ணிக்கை அதிகரித்தது. செம்படம்பரில் கடைசி வாரத்தில் குறைவாக இருந்தது. ஆனால், அக்டோபரில் மீண்டும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி விட்டது. நேற்று மட்டுமே 9167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.