9 எம்.எல்.ஏக்களுக்கு நாட்டுக்கோழி விருந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

 

9 எம்.எல்.ஏக்களுக்கு நாட்டுக்கோழி விருந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சேலம் மாவட்ட கொரோனா தடுப்பு பணிகளி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் செந்தில் பாலாஜி. இந்த கூட்டத்திற்கு திமுகவின் சேலம் மாவட்ட ஒரே எம்.எல்.ஏவான சேலம் வடக்கு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் வந்திருந்தார். ஆனால் அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட சேலம் மாவட்டத்தில் இருக்கும் 8 எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 பாமக எம்எல்ஏக்கள் என 10 பேரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

9 எம்.எல்.ஏக்களுக்கு நாட்டுக்கோழி விருந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

பிற்பகல் 3 மணி வரைக்கும் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றார். செந்தில்பாலாஜி சென்ற 15வது நிமிடத்தில் 9 எம்எல்ஏக்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்துவிட்டு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.

காலையில் 10 மணி ஆய்வுக்கூட்டம் இருக்கிறது என்ற தகவலை தங்களுக்கு முறையாக முன்னரே அறிவிக்காமல், முதல் நாளில் ஆட்சியர் அலுவலகத்தின் பிஆர்ஓ மூலமாக தகவல் சொல்லப்பட்டதால் இந்த ஆய்வுக் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்தார் என்று தகவல்.

9 எம்.எல்.ஏக்களுக்கு நாட்டுக்கோழி விருந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி

காலையில் பத்து மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரைக்கும் செந்தில்பாலாஜி ஆய்வு நடத்திய அந்த நேரத்தில் 9 எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமியின் சிலுவம்பாளையம் வீட்டில் தான் இருந்துள்ளனர். அவர்களை தன் வீட்டிற்கு வரவழைத்த எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்து விட்டு கலெக்டரிடம் கொடுப்பதற்கான மனுவையும் தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார்.

இதற்குள் எல்லோருக்குமாக நாட்டுக்கோழி விருந்து தயாராகிக் கொண்டிருந்திருக்கிறது. நாட்டுக்கோழி விருந்து தயாரானதும் மதியம் 9 எம்எல்ஏக்கள் உடன் அமர்ந்து எடப்பாடி பழனிச்சாமி விருந்து சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னர்தான் எல்லோரையும் அழைத்துக் கொண்டு அவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார் என்கிறார்கள் சிலுவம்பாளையம் அதிமுகவினர்.