99,999 ரோஜாக்கள் கொடுத்து புரப்போஸ் செய்த காதலன்!?

 

99,999 ரோஜாக்கள் கொடுத்து புரப்போஸ் செய்த காதலன்!?

மக்காவ் நகரில் சூதாட்ட கிளப்கள் நடத்தும் சீன பில்லினியர் ஸ்டான்லி ஹோ.சூதாட்ட விடுதி என்றால் உங்களுக்குத் தெரியும்,ஆனால் மக்காவ்?.மக்கா நகரம் கருப்பு பணம் வைத்திருப்போரின் மெக்கா.

மக்காவ் நகரில் சூதாட்ட கிளப்கள் நடத்தும் சீன பில்லினியர் ஸ்டான்லி ஹோ.சூதாட்ட விடுதி என்றால் உங்களுக்குத் தெரியும்,ஆனால் மக்காவ்?.மக்கா நகரம் கருப்பு பணம் வைத்திருப்போரின் மெக்கா.

ஸ்விஸ் பேங்க் கேள்விப்பட்டு இருப்பீர்கள் ( மறக்க முடியுமா மோடியின் 15 லட்சத்தை ),அதிகம் போனால் பஹாமாஸ்,கேமென் தீவுகள்.அந்த வரிசையில் இப்போது மக்காவ்தான் டாப்.சீனாவின் ஒரு பகுதியாக இருக்கிறது,ஆனால் இல்லை.எந்தக் கேள்வியும் இல்லாமல் எத்தனை கோடி டாலர்களை வேண்டுமானாலும் இங்குள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். அங்கே சூதாட்ட விடுதி நடத்துகிறார் ஸ்டான்லி ஹோ

அவருக்கு இரண்டு மகன்கள்,ஒரு மகள்.  சபரினா ஹோ என்கிற அந்த மகளும் சாதாரண ஆள் அல்ல! 28 வயதாகும் ஹோ மக்காவின் கலாச்சாரம் கலை இவற்றை வளர்க்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் ;ஒரு சூப்பர் மாடலுங்கூட.

1

ஹார்வர்டில் படித்தவர்.அவரது காதலர் பெயர் தாமட் க்ஸின்.ஷங்காய் நகரின் ஒரு மாலில் வைத்து சபரினாவுக்கு 99,999 ரோஜாக்கள் கொடுத்து புரப்போஸ் செய்தாராம் தாமஸ். இப்போதே சபரினா கர்ப்பமாக இருக்கிறார். சபரினா, தாமஸ் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.அதற்கு தங்கமும், வைரமுமாய்.வந்த பரிசுப் பொருடகளின் மதிப்பு 100 மில்லியன் ஹாங்காக் டாலராம்.நம்ம ஊர்காசுக்கு 80 கோடி ரூபாய்,இதற்கே வாயைப் பிளக்காதீர்கள்,’ 

2

திருமணத்துக்கு பிறகு எங்களை அடிக்கடி வந்து பார்,நிறைய குழந்தைகள் பெத்துக்கோ ‘ என்று ஆசீர்வதித்த சபரினாவின் தந்தை ஸ்டான்லி ஹோ,தன் மகளுக்கு 500 மில்லியன் ஹாங்காங் டாலர் மதிப்புள்ளஒரு வீட்டை கல்யாணப்பரிசாக கொடுத்திருக்கிறார்.அதாவது 400 கோடி ரூபாய்..! வயிற்று எரிச்சலை விட்டுவிட்டு மணமக்களை வாழ்த்துங்கள்.