99 ரூபாய்க்கு பதில் 99000 ரூபாய் எடுக்கப்பட்ட கொடுமை “ஆன்லைனுக்கு பதிலா ‘ஆப்பு லைன்’னு பேர் வைக்கலாம் ..

 

 99 ரூபாய்க்கு பதில் 99000 ரூபாய் எடுக்கப்பட்ட கொடுமை “ஆன்லைனுக்கு பதிலா ‘ஆப்பு லைன்’னு பேர் வைக்கலாம் ..

ண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் தனது செல்ல நாய்களை பதிவு செய்ய முயன்ற முன்னாள் ஆசிய விளையாட்டு  வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர், சைபர் மோசடியில் ரூ .99,000 இழந்தார்.

முன்னாள் ஆசிய விளையாட்டு  வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் ஆன்லைன் மோசடியில் 99000 ரூபாய் இழந்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 

சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் தனது செல்ல நாய்களை பதிவு செய்ய முயன்ற முன்னாள் ஆசிய விளையாட்டு  வீரர் மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர், சைபர் மோசடியில் ரூ .99,000 இழந்தார். அவரது  வெள்ளிக்கிழமை சண்டிகரில் மில்கா சிங்கின் மனைவி கவுர் தன்வீட்டு நாய்களை முனிசிப்பல் கார்பரேஷனில் பதிவு செய்ய ஆன்லைனில் முற்பட்டார்,

crime

 

அப்போது அந்த வெப்சைட்டில் ராம்குமார் என்பவரை தொடர்பு கொள்ள கூறியிருந்தது, இதனால் கவுர் ராம்குமாருக்கு போன் செய்து 99 ரூபாயை கட்டி பதிவு செய்ய தன்னுடைய கிரெடிட் கார்டு விவரங்களை கூறினார். பிறகு அவரது அக்கௌன்ட்டை சரிபார்த்த போது 99 ரூபாய்க்கு பதிலாக 99000 ரூபாய் எடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் அந்த வெப்சைட்டில் குறிப்பிட ராம்குமாருக்கு போன் செய்து கேட்டபோது அவர் முறையாக  பதிலளிக்கவில்லை. இதனால் அருகிலுள்ள சைபர் க்ரைம் போலீசில் அவர் புகார் தந்தார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .