இந்தியாவில் 97.17 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

 

இந்தியாவில் 97.17 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2 மாதங்களாக குறைந்த வண்ணமே இருக்கிறது. ஆரம்பக் கட்டத்தில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 முதல் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகிறது. அதோடு, கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்த வண்ணமே இருக்கிறது. இதனிடையே, பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதாக கூறப்படுவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் 97.17 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!

இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக 23,067 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,01,46,845 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் உயிழந்ததால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,47,092 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொரோனாவில் இருந்து இதுவரை 97.17 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.